நான் ஒரு எம்.பி.. எனக்கு அனுமதி இல்லையா?..தருமபுரி எம்.பி. கொந்தளித்து வாக்குவாதம்..!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். இவருக்கென ட்விட்டர் தளத்தில் தனியொரு படையே இருக்கிறது. இந்நிலையில், இவர் தமிழக முதல்வர் ஆலோசனையில் பங்கேற்க தனக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறி, காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 

தமிழக முதல்வர் தற்போது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று அம்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும், பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தர்மபுரி பயணம் செய்திருந்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், தருமபுரி எம்.பிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது. 

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எம்.பி. செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்த நிலையில், இவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri MP Senthilkumar Protest Dharmapuri Collectrate Office


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->