தண்ணீர் இல்லாமல் இருக்கும் நீர் நிலைகளில் தனியார் மருத்துவமனை கழிவுகள்.. தர்மபுரியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தண்ணீர் வற்றிப்போன குளம் ஒன்றில், தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படும் அதிர்ச்சி சம்பவம் தர்மபுரியில் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், நோய் பரவல் அதிகரிக்கும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. 

தர்மபுரியில் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் வனப்பகுதி மற்றும் நீரோடை, ஏரிகள் என அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் ஆங்காங்கே வீசி செல்லப்படும் சம்பவம் நடந்து வருகிறது. 

இந்த மருத்துவ கழிவுகள் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கும் நிலையில், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், அங்கு சுற்றுச்சூழல் அபாயம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. நீரோடையில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ள சோகமும் அரங்கேறியுள்ள நிலையில், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்து பாட்டில்கள், இரத்தக்கறை படிந்த பஞ்சுகள், இரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்ட ஊசிகள் போன்றவை இருந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Medical Wastage Dumped on Water Resources Peoples Sad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->