ஒகேனக்கலுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, மும்பை, உத்திர பிரதேசம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷின் கன்னடம், உடுப்பி மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக அதிக மழைக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடகு, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, காவேரி நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக ஒகேனக்களுக்கு தினசரி நீர்வரத்து 1500 கன அடியாக இருந்து வந்த நிலையில், இது 2,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், கர்நாடகாவின் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்யுமாயின், நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவேரி நதியில் அமைக்கப்பட்டுள்ள பல அணைகள் தொடர்ந்து நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DHARMAPURI HOGENAKKAL WATER ARRIVING QUANTITY INCREASED DUE TO KARNATAKA RAIN 18 JUNE 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->