பாமக - அதிமுக கோட்டையானது தருமபுரி மாவட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி திமுக 157 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், அதிமுக 75 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் திமுக ஆட்சியை அமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளான தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் தொடர்ந்து அதிமுக மற்றும் பாமக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதில், தருமபுரி மற்றும் பென்னாகரம் தொகுதி பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த 5 தொகுதிகளிலும் அதிமுக - பாமக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். 

பென்னாகரம் மற்றும் தர்மபுரியில் கடந்த தேர்தலில் திமுக வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. தருமபுரி தொகுதியில் உள்ள பாலக்கோட்டில் கே.பி அன்பழகன் வெற்றி அடைந்தார். இதனைப்போன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி மற்றும் சேலம் வடக்கு தொகுதியை தவிர்த்து உள்ள 7 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக - பாமக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri District Kingdom for PMK and AIADMK TN Election Result 2021 Forefront


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->