தருமபுரி || தேர்வறையில் விடைகளை எழுதி போட்ட ஆசிரியர் - கையும் களவுமாக பிடித்த ஆட்சியர்..!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பிக்கனஅள்ளியில் அம்மாவட்ட ஆட்சியர் சாந்தி கடந்த செப். 28ம் தேதி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுக்குச் சென்றபோது, அந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

அப்பொழுது, தேர்வு முடிந்து வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் வினாத்தாள் எளிமையாக இருந்ததா? தேர்வை எப்படி எழுதினீர்கள்? என்று ஆட்சியர் சாந்தி விசாரித்தார். 

அதற்கு அந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சொல்லி வைத்ததுபோல், நன்றாக எழுதினோம். எல்லோரும் தேர்ச்சி அடைந்து விடுவோம் என்று உற்சாகமாக தெரிவித்தனர். 

இதையடுத்து ஆட்சியர் மாணவர்களிடம் இருந்து வினாத்தாளை வாங்கிப் பார்த்தார். அதில் உள்ள சில வினாக்களுக்கான விடைகளை மாணவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் பதில் தெரியாமல் பதற்றத்தோடு அங்கையும் இங்கையும் பார்த்தனர். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. 

இதைத்தொடர்ந்து, ஆட்சியர் மாணவர்களை பார்த்து, எல்லோரும் நன்றாக தேர்வு எழுதினோம் என்று சொன்னீர்கள். ஆனால் ஒருவருக்கும் கேள்விக்கான விடை தெரியவில்லையே ஏன்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார். 

இதனால் அச்சமடைந்த மாணவர்கள், "எங்கள் கணித ஆசிரியர் கேள்விக்கான விடைகளை கரும்பலகையில் எழுதி போட்டார். அதைப் பார்த்து தேர்வு எழுதினோம்" என்று தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, இதுகுறித்து விசாரணை செய்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கணித தேர்வன்று நடந்த இந்த சம்பவம் குறித்தும், மாணவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்தும் ஒரு வார காலத்திற்குள் சரியான விளக்கம் அளிக்கும்படி கணித ஆசிரியருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri district colecter visit schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->