வரலாறு இன்று அப்படி என்ன பேசுகிறது?... நவம்பர் 28 ! - Seithipunal
Seithipunal


தண்டபாணி சுவாமிகள்:

தமிழ் புலவர் தண்டபாணி சுவாமிகள் 1839ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரலிங்கம். 

'பூமி காத்தாள்" என்ற அம்மனுக்கு இப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா மூலம் பாடி விளக்கினார். முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும், திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

உடல் முழுவதும் திருநீற்றை பூசிக்கொண்டு, இடுப்பில் கல்லாடை அணிந்துக்கொண்டு, கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டு வலம் வந்ததால் இவரை மக்கள் தண்டபாணி சுவாமிகள் என்று போற்றினார்கள். மேலும் அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த பாக்களில் 'வண்ணம்" என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார்.

72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார். இவர் ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களையும் தந்துள்ளார்.

எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் 50 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 1898ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhandapani swamigal birthday in 2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->