தடைபட்ட எஸ்ஐ மகளின் நிச்சயதார்த்தம் - மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய DGP சைலேந்திர பாபு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெ.சந்தான ராஜ்-க்கு, காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) சைலேந்திர பாபு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "அன்புள்ள சந்தான ராஜ் . தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொளி வாயிலாக கண்டறிய நேர்ந்தது . 

தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் விடுப்பு மறுக்கக் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 

வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். " என்று அந்த கடிதத்தில் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP Syilendra Babu wrote an apology letter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->