தை அமாவாசை : சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு அருகே வன பகுதியில் மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், வருகிற தை மாதம் அமாவாசையை ஒட்டி சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நாளை முதல் 22-ந்தேதி வரை நான்கு நாட்கள் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் படி, நாளை பிர தோஷ வழிபாடும், வருகிற 21-ந் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது. 

இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில், "காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மலையேற அனுமதி கிடையாது. கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். 

அவ்வாறு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மலையில் உள்ள ஓடைகளில் குளிக்கவும், இரவில் தங்கவும் அனுமதி இல்லை. 

பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 

இந்தக் கோவிலுக்கு தை அமாவாசை நாளில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நீரோடை பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

இந்த தை அமாவாசையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotes allowed in chathurakiri temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->