நாகை: வேளாங்கண்ணி நவநாள் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..! - Seithipunal
Seithipunal


நவநாள் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கயமாதா பேராலயத்தில் வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் விழா ஆகஸ்ட்  29 தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை நவநாள் விழாவாக நடைபெறும்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நவநாள் விழாவில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இந்த விழாவை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் காணலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees denied permission for Velankanni New Year festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->