திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை..! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மீண்டும் தடை விதிக்கபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தூத்துக்குடி மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வர். ஆடிபெருக்கை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டிருந்தது.

இந்நிலையில் வருகின்ற 8 தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் திருச்செந்தூர் கோவில்,  குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு (04-08-2021 முதல் 08-08-2021 வரை) தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

மேலும், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ள நிலையில் கோவிலில் நடைபெறும் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ஆம் தேதி வரையும், வருகிற 10, 13-ஆம் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees barred at Thiruchendur Subramania Swamy Temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->