ஆரணி அருகே ஆலமரத்தில் பால் வடிந்ததால் பக்தர்கள் பரவசம்..! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே ஆலமரத்தில் பால் வடிந்ததால் பக்தர்கள் பரவசம். 

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்டது சின்னபுத்தூர் கிராமம். இங்கு பிரசித்திப்பெற்ற  மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. அடிமாதம் இத்திருக்கோயிலுக்கு பல்வேறு ஊர் மக்கள் கூழ் கொண்டுவந்து ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த விழாவின் போது வெளியூர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். 

இந்த விழாவில் கல்ந்துகொண்டு அம்மனை தரிசித்துச் சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்புகின்றனர். இந்த ஆண்டு கொரானா நோய்பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் ஒரு ஆலமரம்  பல வருடங்களாக உள்ளது. இந்த மரத்திலிருந்து நேற்று தீடீரென பால் வடிந்ததைக் கண்ட ஊர் மக்கள் பரவசம் அடைந்தனர். பெண்கள் சிலர்  மருள் வந்து ஆடினர். 

இதையடுத்து பால்வடித்த இடத்தில் கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் ஆராதனை செய்யப்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்களும் திரளாக வந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டு சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees are ecstatic as milk is drained from a tree near Arani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->