தமிழக குடிமகனின் வயிற்றில் அடித்து பிடுங்கிய பணம்! பங்கு பிரிப்பதில் அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குள் தகராறு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே டாஸ்மார்க் கடையில், மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தொகையை,பங்கு பிரிப்பதில் இரண்டு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்த காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அடுத்துள்ள புளியால் கிராமத்தில் தமிழக அரசின் மதுபான கடையான 'டாஸ்மார்க்' கடை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையில் வாடிக்கையாளர்களிடம் மது பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில், இந்த டாஸ்மார்க் கடையின் விற்பனையாளர் கோட்டைச்சாமி நாளொன்றுக்கு 2500 ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்கும் பணத்தை எடுத்துக் கொள்வதை தட்டிக் கேட்க வேண்டும் என்று, கடை மேலாளர் முருகனிடம் மற்றொரு விற்பனையாளர் சுதாகர் பேசும் வீடியோவும், ஆடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக டாஸ்மார்க் ஊழியர்கள் கூடுதலாக விற்ற பணத்தை பங்கு பிரிப்பதில் சண்டையிட்ட காணொளி அமைந்துள்ளது.

ஊருக்கு 'இளிச்சவாயன்' தமிழ்நாடு 'குடிமகன்' என்று நெட்டிசன்கள் சொல்வது உண்மை தானோ?!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devakottai TASMAC Shop Stafs Fight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->