பரபரப்பு ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி - துணை முதலமைச்சர் இரங்கல்!   - Seithipunal
Seithipunal


மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வருபவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு மாணவி ஜோதி துர்கா பேசிய பெரிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்,நீட் தேர்வு அசத்தல் தற்கொலை செய்து கொண்டதாகவும். அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் ஆடியோவில் மாணவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஜோதி துர்கா தோல்வி அடைந்த நிலையில், இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாணவி ஜோதி துர்காவின் மறைவிற்கு துணை முதலமைச்சர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார், அதில், "மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy cm ops condolence to neet suicide student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->