கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி .! - Seithipunal
Seithipunal


கொசுக்களினால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வகை செய்யும் வகையில் நடமாடும் மருத்துவமனைகள், நிலவேம்பு வழங்கும் வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரங்கள் போன்ற 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இன்று புறப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் இந்த வாகனங்களை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியை மேற்கொள்வதுடன், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த இருக்கிறது.

இந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “ தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனங்கள் இயக்கப்படும் என்றும், காய்ச்சல் பரவுவதை தடுக்க அமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவக்குழுக்கள் டிசம்பர் மாதம் வரை செயல்படும் என்றும் கூறினார்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு இடையில், வட சென்னை பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லை என்று கூறி அனுமதிக்க மறுக்கப்படுவதாக கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த விஜயபஸ்கர், ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் புதிதாக வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dengue fever has decreased over the past year


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->