2 மணி நேரம்.. 4 காம கொடூரர்கள்.. வலி தாங்காமல் கதறிய வடமாநில இளம்பெண் - தமிழகத்தை உலுக்கும் பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வங்கியில் வேலை செய்யும் வடமாநில பெண், பயிற்சிக்காக தமிழகத்தில் கும்பகோணம் வந்திறங்கி  இன்று வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.

வங்கிபணி தொடர்பான பயிற்ச்சியை பெற வடமாநில பெண் ரயில் மூலமாக  கும்பகோணம் வந்திறங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வந்து சேர்ந்ததால் இரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் ஏதும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், சுற்றுமுற்றும் பார்த்துள்ளார். ஆட்டோக்களும் இல்லாததால் ட்ராலி பேக்கை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலை ஓரமாக மது அருந்தி கொண்டிருந்த சிலர், அப்பெண்ணின் அருகில் வந்து பேச்சு கொடுத்துள்ளனர்.

இந்தி மட்டுமே தெரிந்த அந்த பெண்ணுக்கு அவர்கள் என்ன கூறினார்கள் என்று புரியவில்லை. அருகில் ஹோட்டல் இருப்பதாகவும், அழைத்துச்செல்வதாகவும் தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மது அருந்திய நபர்கள் கூறியிருக்கின்றனர்.

அதனை நம்பி உடன் சென்ற அந்த பெண்ணை, இரு மர்மநபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கற்பழித்துள்ளனர். மீண்டும் இருவரை செல்போனில் அழைத்து வரச்சொல்லியுள்ளனர்.

அவர்களும் அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் நான்கு காமகொடூரர்களிடம் சிக்கிய அந்த இளம்பெண் தப்பிக்க முடியாமல் திணறியுள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் கதறிய பொழுது கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இறுதியாக ஆட்டோவில் அழைத்துச்செல்லப்பட்டு ஒரு ஹோட்டல் அருகே விடப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து அப்பெண்ணின் பெற்றோர்கள் தமிழகம் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பயிற்சிக்காக தமிழகம் வந்த பெண், இப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளது தமிழக அளவில் அதிர்வலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

English Summary

Delhi-woman-employee-molested-case-4-youths-arres


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal