ஆக்சிஜன் பற்றாக்குறையால் சோகம்.. 20 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலி.! - Seithipunal
Seithipunal


இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் கசிவு காரணமாக சேமித்து வைக்கப்பட்டு இருந்த ஆக்சிஜன் வெளியேறி, 24 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. 

ஆனால், இது உண்மை இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. 

டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, சுமார் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தேவையான அளவிற்கு ஆக்சிஜன் விநியோகம் இல்லாததால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அங்கு 200 பேர் சிக்சிஹாய் பெற்று வருவதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Jaipur Golden Hospital Oxygen Supply Problem 20 Patients Died 24 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->