கூடுதல் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வீடுகளில் தயாரிக்கும் தீபாவளி "கிப்ட் பாக்ஸ்"  - Seithipunal
Seithipunal


சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல ரக பட்டாசுகளை பெட்டிகளில் அடைத்து "கிப்ட் பாக்ஸ்" என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேரத்தில் பலதரப்பட்ட வெடிகளை ஒரே பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்வது சம்பந்தமாகவும் பல்வேறு நிபந்தனைகளை வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கிப்ட் பாக்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆரம்ப விலையாக ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான கிப்ட் பாக்ஸ்கள் சிவகாசி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, இந்த கிப்ட் பாக்ஸ்கள் சிவகாசி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள வீடுகளில் தயாராகி வருகிறது.  பல பட்டாசு ஆலைகள் மூட்டை, மூட்டையாக பட்டாசுகளை வீடுகளில் இறக்கி வைத்துவிட்டு, அதற்கான பெட்டிகளையும் வீட்டில் உள்ள பெண்களிடம் கொடுத்து விடுகிறார்கள். 

பெண்கள், ஒவ்வொரு பெட்டிக்கும் எத்தனை பட்டாசுகள் போட வேண்டும் என்ற அட்டவணைப்படி பட்டாசுகள் போட்டு அடுத்த நாள் கொடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற சட்ட விரோதமான செயலால் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் பல கிராமங்களில் இது போன்ற செயல்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deewali gift box prepare in house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->