டிசம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு.! அமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறாது என்று, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்றுப்பரவல் காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள், நோய்த்தொற்று குறைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மேலும், வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல நவம்பர் மாதம்  காலாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை தெரிவிக்கையில், "மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும். அதே சமயத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப் பட வாய்ப்புகள் இல்லை.

ஆனால், டிசம்பர் மாதம் ஒரு தேர்வு ஒன்று நடைபெற உள்ளது. இது காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் போல் அல்லாமல் இருக்கும். மேலும் திட்டமிட்டபடி வருகின்ற நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பள்ளிகள் திறக்கப்படும்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dec school exam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->