உள்ளாட்சி தேர்தல் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! கூடுதலாக ஒருநாள்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும்  இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆனது, கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில், 16ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் 13 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற நிலை இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் வருகின்ற 14ஆம் தேதி சனிக்கிழமை பொது விடுமுறை இல்லை என்பதால் அன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தேர்தலில் போட்டியிட உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் இல்லாத 9 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dec 14 working day for nomination file in local body polls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->