இரவு நேரத்தில் ஏரிக்கு குளிக்க சென்றவருக்கு இப்படியா நடக்க வேண்டும்.?! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன் பட்டியை சேர்ந்த நடராஜன்(54) எரியோடு பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார்.  திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் எரியோடு அருகே கரும்பாறை குளம் ஒன்று இருக்கின்றது. 

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. உபரிநீர் இதில் இருந்து கரும்பாறை குளத்திற்கு செல்கின்றது. நடராஜன் வழக்கமாக மாலை நேரத்தில் இந்த குளத்தில் துணி துவைத்து குளித்து விட்டு வீட்டிற்கு வருவார். 

நேற்றும், அதேபோல் குளிக்க சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குளத்திற்குச் சென்று பார்த்த பொழுது அவரது உடைகள் இருந்துள்ளது. எனவே, குளத்தில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நடராஜனை தேடினர். இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு இன்று காலை நடராஜனை பிணமாக மீட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜன் தவறி விழுந்த அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death went to the lake at night


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->