தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால், கெத்து காட்டும் தமிழகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இதுவரை 1937 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 52 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 1101 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை 24 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 809 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு உடனடியாக ரூபாய் 1000 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death toll in tamil nadu dropped to 2 prercentage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->