பல ஆண்டுகளாய் சேதமடைந்த மின்கம்பங்கள்., மின்சார துறையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்..!! - Seithipunal
Seithipunal


வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (51). இவர் அந்த பகுதியில் விவசாயியாக உள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய வேலைகளை செய்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலுள்ளவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறும் போது, கஜா புயலின் போது சேதமடைந்த  மின்கம்பங்கள் பலமுறை  சரிசெய்யபட வில்லை என கூறப்படுகிறது.

இதனால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுளள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death of a farmer who stepped on a power line cut in a field


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->