உயிரிழந்த விசாரணை கைதி! போலீசார் மீது புகார் அளிக்க விடாமல் தடுக்கிறாரா மேயரின் தந்தை? - Seithipunal
Seithipunal


குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியின் விசாரணையால் ஆளுங்கட்சி தலையிடா?

ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கடந்த 20ம் தேதி ஆகாஷ் என்பவர் குடித்துவிட்டு ரகளை ஈடுபட்டுள்ளார். அப்போது ரயில்வே ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடி உடைத்ததாக கூறி விசாரணைக்காக காவலர் மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதியை காவலர்கள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அன்று இரவு கை கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் சுய நினைவு இழந்த நிலையில் உறவினரிடம் ஆகாஷை காவலர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆகாஷை சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

கடந்த 20ம் தேதி முதல் 9 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி தலைமையில் ஆகாஷின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனிடையே போலீசாரின் தாக்குதலால் ஆகாஷ் உயிரிழந்தது தொடர்பாக ஓட்டேரி போலீசார் மீது புகார் அளிக்க விடாமல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தந்தை ராஜன் மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாரின் தவறுகளை மறைக்க திமுகவின் தரப்பிலிருந்து புகார் அளிக்க விடாமல் தடுப்பது ஆகாஷ் மரணத்தில் உண்மை வெளி கொண்டு வருவதை கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே சட்டம் ஒழுங்கை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பேன் என உறுதி அளித்த முதல்வர் அவர் சார்ந்த துறையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் காவலர்கள் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death investigation arrestedDoes the mayors father prevent him from filing a complaint against the police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->