கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு.! கோவையில் சோகம்.. ! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடுப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக 12 பேர் சேர்ந்த ஒரே குடும்பம் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நேரிட்டது. இதில் 4 பெண்கள், சிறுமி என்று மொத்தம் ஒன்பது பேர் பலியாகினர். 

மேலும், உள்ள சிக்கி கொண்ட 3 பேரின் நிலை குறித்து இன்னும் விவரம் எதுவும் தெரியாத நிலையில் இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலியாகியுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இதற்கு முன்னதாக கடலூர் கம்மியா பேட்டையில் இதேபோல் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death due to rain increase in kovai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->