மாமியாரை கையில் ஏந்தி வந்து வாக்களித்த மருமகள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்றது. நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு 5 மணிக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியூரில் பணிபுரியும் நபர்களும், சொந்த ஊர்களுக்கு வந்து அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

மேலும் பல முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார்கள். இந்தநிலையில் பூந்தமல்லியில் 87 வயதான தனது மாமியாரை அவரது மருமகள் கையில் சுமந்து வந்து வாக்களிக்க வைத்தார்கள். இந்த சம்பவம் அப்பகுதினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னேரிக்குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கு 87 வயது ஆகிறது, இவரது மருமகளின் பெயர் பாண்டியம்மா. மாமியாருக்கு வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாது எனவே நான் ஓட்டு போட வேண்டும் என்ற பாப்பம்மாள் அவரது மருமகளிடம் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து உங்களுக்கு பார்வை சரியாக தெரியாது, எப்படி செல்வீர்கள்? என்று மருமகள் கேட்டதற்கு, பாப்பம்மாள் நான் வாக்களித்து ஆகணும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். இதனால் அவரது மருமகள் ஆட்டோ வைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருக்கிறார். வாக்குச் சாவடியிலிருந்து உள்ளே செல்வதற்கு வீல் சேர் வசதி இல்லாத காரணத்தால், மருமகளே பாப்பம்மாளை கையில் தூக்கி சென்று வாக்களித்தார். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினர் நிகழ்ச்சி அடைந்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter in law carried her mother in law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->