என் பெயரை காரணம் காட்டி கோவிலில் இருந்து வெளியேற்றினார்... நடன கலைஞர் ஜாகிர் உசைன் வேதனை..! - Seithipunal
Seithipunal


ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து துரத்தப்பட்டதற்கு தனது பெயர் தான் காரணம் என பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகி ஒருவர் ஜாகிர் உசேனை கோவிலில் இருந்து துரத்தியுள்ளார்.

இது குறித்து தனது முகநூலில் ஜாகிர் உசைன் பதிவிட்டிருப்பதாவது,

நான் என் தாய்வீடாக கருதும் , தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் காரணம் என் பெயர் ..

முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு , பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன் ..

இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும் . ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது .

என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல . இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன் ..

காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும் .

அரங்கன் என்றும் எமக்குத் துணை என பதிவிடிருந்தார்.

இந்த பதிவை அடுத்து பலரும் ஜாகிர் உசைனுக்கு ஆதர்வாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரை கோவிலை விட்டு துரத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்குன் மன உளைச்சலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dancer Zakir Usain has posted that he was kicked out of the temple citing my name


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->