உங்களுக்கு வரும் இந்த மெசேஜை மட்டும் தொடாதீர்கள்.! சைபர் கிரைம் போலீசார் விடுத்த எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


வங்கி கணக்கை மொபைல் என்னுடன் இணைத்து உள்ள வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:

பத்து நிமிடத்தில் நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று, உங்களது செல்போனுக்கு வரும் மெசேஜ் மற்றும் லிங்கை யாரும் கிளிக் (தொடக்கூடாது) செய்ய வேண்டாம் என்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வங்கி மூலமாக அனுப்புவதாக கூறி, ஒரு வலைதள லின்க் ஒன்று மெசேஜ் மூலம் பலரின் செல்போன் எண்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மெசேஜில் உள்ள லிங்க்கை பத்து நிமிடத்திற்குள் அழுத்தி, உங்களது விவரங்களை பதிவிட வேண்டும். இல்லையென்றால் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற லிங்குகளை வங்கி கணக்குடன் இணைத்துள்ள எண்ணின் மூலம் கிளிக் செய்து, அந்த விவரங்களை பதிவு செய்வதால், அடுத்த மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்கிலிருந்து, தனிப்பட்ட விவரங்களை மோசடிக் கும்பல் திருடி உடனடியாக, ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மால்கள் மூலமாகவும் பணத்தை திருடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், "பத்து நிமிடத்தில் உங்களது விபரங்களை அப்டேட் செய்ய விட்டால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று லிங்க் உடன் வரும். இந்த மெசேஜை பொதுமக்கள் யாரும் தொட வேண்டாம். இதுபோன்ற வரும் மெசேஜ்களை யாரும் நம்பவும் கூடாது. வங்கியில் இருந்த இது போன்ற எந்த ஒரு மெசேஜையும், லிங்கையும் அனுப்ப மாட்டார்கள். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cyber crime police warning


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->