இந்தியாவிலேயே  இந்த விஷயத்தில் தமிழகம் ரொம்ப கம்மியாம்.!  - Seithipunal
Seithipunal


நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறை கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உத்திரபிரதேசத்தில் அதிகளவிலான குற்றவாளிகள் சிறைகளில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு சிறைகள் இருப்பதாகவும், ஆனால் குறைந்த அளவிலான கைதிகளே இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. 

சிறை கைதிகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தமிழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் 61.3 சதவிகித கைதிகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ளது. 

ஆனால் 13 ஆயிரத்து 999 கைதிகளே உள்ளனர். இதில் 601 பெண் கைதிகள் மற்றும் 112 வெளிநாட்டு கைதிகள் தமிழக சிறைகளில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் தூக்கு தண்டனை கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயிரத்து 495 பேரும் தமிழக சிறைகளில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CULPRITS ARE VERY SMALL AMOUNT IN TAMILNADU JAIL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->