ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 3 இஸ்லாமியர்கள் கைது!! அடுத்தடுத்து வெளிப்படும் அதிர்ச்சிகள்!!  - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் ஒரு சமையல் கலைஞர். இவர், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.

சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர்.

ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதை கண்டித்துப் பேசிய அவர் பணி முடிந்து செல்லும்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட தலைவர்கள் தங்களது கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே 5 இஸ்லாமியர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விசாரணையில் மேலும், 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களும் இஸ்லாமியர்கள் என்பது அதிர்ச்சியை தருகிறது. 

English Summary

culprits are arrested by police in ramalingam murder


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal