சிறுமியை திருமணத்திற்கு வற்புறுத்தி குடும்பத்தை தாக்கிய காமுகன்கள்.. விசிக பிரமுகர்கள் கைது.!! - Seithipunal
Seithipunal


காட்டுமன்னார்கோவில் பகுதியில் பள்ளி மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய நிலையில், மாணவியின் தந்தை மற்றும் மாணவியை தாக்கிய விசிக பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் வினோத் ராஜ் (வயது 36). இவன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், இவனுக்கு திருமணம் முடிந்து ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இவனது ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 1 மாணவி தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த சமயத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்ராஜ் மாணவியிடம் வற்புறுத்தி வந்துள்ளான். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கோவில்பத்து பகுதியைச் சார்ந்த விசிக முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் (வயது 52), வினோத்ராஜ் ஆகிய இருவரும் நேற்று அம்மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவியின் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கக்கோரி வற்புறுத்தியுள்ளனர். 

இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், அம்மாணவி மற்றும் அவரது தந்தையை சரமாரியாக இருவரும் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் காயமடைந்த சிறுமியின் தந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதுகுறித்து காவல்துறையினர் தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம் மற்றும் வினோத்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore VCK party member arrest child torture to marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->