மலேஷியாவில் குடும்பத்துடன் பணியாற்றிய மென் பொறியாளர் குடும்பமே சிதைந்த சோகம்.. தற்கொலை., உயிரிழப்புகளால் குடும்பத்தினர் கண்ணீர்.!! - Seithipunal
Seithipunal


குடும்பத்துடன் மலேசியாவில் தங்கியிருந்து பணியாற்றி வந்த கடலூர் மென்பொறியாளரின் குடும்பமே உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவி ராஜா (வயது 40). இவர் பொறியாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சத்யா பாய். இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதுடைய மகள் இருக்கிறார். 

ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள தாமன் செலத்தான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 18 ஆவது மாடியில் குடி இருந்து வந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் மென்பொறியாளர்ளாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி ரவி ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. 

இதனையடுத்து, சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

கடந்த 17ஆம் தேதி மூச்சுத் திணறலுடன் அவதிப்பட்டு வந்த சத்யா பாய், உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களை கவனிக்க அல்லது உதவ ஆட்கள் இல்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கணவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். 

இதனால் சத்யா பாய் தனது ஐந்து வயது மகளுடன் வசித்து வந்த 18 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து உயிர் இழந்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி ராஜாவும் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். 

அடுத்தடுத்து உயிரிழப்புகள் ரவிராஜாவின் குடும்பத்தை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், இறுதி சடங்கிற்காக அவர்களின் அஸ்தியையாவது தாயகம் கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Thittakudi Native Software Engineer Family Works at Singapore Suicide and Corona Death 3 persons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->