கடலூர்: நண்பனின் பணம், நகைக்கு ஆசைப்பட்டு கொலை.. 2 வருடம் பின் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! - Seithipunal
Seithipunal


நண்பனை கொலை செய்து எதுவும் தெரியாது போல இருந்த நட்பூ, 2 வருடம் கழித்து மற்றொரு வழக்கில் கைதாகி உண்மையை தெரிவித்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி மணப்பாக்கம் கிராமத்தை சார்ந்தவர் பத்மநாபன் (வயது 55). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்த நிலையில், கடந்த 2019 ஆம் வருடத்தில் விநாயகர் கோவில் அருகே தலையில் அடிபட்டு மர்மமான முறையில் இருந்து கிடந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காத உறவினர்கள், உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், பண்ரூட்டியில் இட்லி வியாபாரம் செய்து வந்த சரசு (வயது 67) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் இராஜேந்திரன் என்பவரின் மகன் விஸ்வநாதனை (வயது 33) கைது செய்த காவல் துறையினர் கடலூர் சிறையில் அடைத்தனர். 

இவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான வாக்குமூலத்தில், " நானும் - மணப்பாக்கம் பத்மநாபனும் நண்பர்கள். நாங்கள் இருவரும் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி விநாயகர் கோவில் அருகே மதுபானம் அருந்தினோம். 

இதன்போது, பத்மநாபன் கையில் இருந்த மோதிரமும், சட்டைப்பையில் இருந்த பணமும் என் கண்களை உறுத்தியது. அதனை பறிக்க திட்டமிட்டு, பத்மநாபன் மதுபோதையில் இருக்கையில் அவரது தலையில் கட்டையால் அடித்தேன். அவர் மயங்கி விழுந்தார். பின்னர், நகை மற்றும் பணத்தை எடுத்து வந்துவிட்டேன். 

அவர் இறந்த இடத்திற்கு அருகே மதுபாட்டிலும் இருந்ததால், அவர் மதுபோதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என உறவினர்கள் எண்ணிக்கொண்டார்கள். இது எனக்கு சாதகமாக போனது. நானும் எதுவும் நடக்காதது போல இருந்தேன். தற்போது சிக்கிக்கொண்டேன் " என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விஸ்வநாதனை காவல் துறையினர் மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர். விசுவநாதன் கொலை செய்த பத்மநாபனின் உடல் பண்ரூட்டி தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, அரசு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. 

நட்புடன் பழகிய நண்பனின் நகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு கொலையை அரங்கேற்றி, இரண்டு வருடமாக எதுவும் தெரியாதது போல இருந்த நண்பன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Panruti friend Murder his Another Friend He Arrest After 2 Years Police Revolves Mystery Death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->