நிவர்புயல்: கடலூரின் உண்மையான நிலை என்ன?! சற்றுமுன் ககன்தீப் சிங் பேடி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதி தீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது. இரவு 11.30 முதல் அதிகாலை 2.30 மணிவரை இந்த புயல் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கடந்த 8 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்துள்ளது. புயல் கரையை கடந்த பகுதியான புதுச்சேரி, கடலூர் உள்பட சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. கடலூரில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இந்நிலையில், கடலூரில் மழை தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் தேங்கி உள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை" என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இன்று சாலை மார்க்கமாக கடலூர் சென்று, நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் கடலூர் சென்று பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore nivar update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->