விசிக ன்னு சொல்லியும் என்னைய விசாரிச்சா என்ன அர்த்தம்?.. அடங்க மறுத்து அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


வாகன சோதனையில் முகக்கவசம் அணியாமல் சிக்கிய விசிக பிரமுகர், தனது அண்ணனின் பெயரை கூறியும், தனது கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பெயரை கூறியும் காவல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து இறுதியில் வாகனத்தை பறிமுதல் செய்யும் சோகத்திற்கு தள்ளப்பட்ட அடங்கமறு அத்துமீறு பரிதாபம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி மீனாட்சி பேட்டை ஜங்ஷனில், காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது இரு சக்கர வாகனத்தில் முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல், அதிவேகமாக வந்த இரண்டு பேரை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் தங்களது வாகனத்தை எப்படி நிறுத்தலாம்? என்று கொதித்துப் போன அந்த இளைஞர், தன்னை வழக்கறிஞரின் தம்பி என்று சொல்ல, இதனை கண்டுகொள்ளாத காவல்துறையினர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஆவணங்களை எடுத்து வர கூறியுள்ளனர். 

இதனால் மேலும் ஆத்திரமடைந்து நான் வி.சி.க கட்சிக்காரன்., விசிக காரன் என்று தெரிவித்தும் வண்டியை மறித்து ஆவணம் கேட்டால் எப்படி? என்று பேச்சை மடைமாற்றிய இளைஞர், காவல்துறை அதிகாரிகள் மீது பி.சி.ஆர் போட திட்டமிட்டபடி பேசிக்கொண்டு இருந்தார். மேலும், எங்கள் கட்சியில் நான்கு எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்று கூறி குரலை உயர்த்தவே, இதற்கு பதிலளித்த காவல்துறை அதிகாரிகள் எங்களிடம் 130 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள், நீங்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததற்கு அபராதம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். 

இந்த விஷயம் பெரும் ஆத்திரத்தை இளைஞருக்கு ஏற்படுத்த, அண்ணனுக்கு போன் போடுகிறேன் என்று வாகனத்தில் தன்னுடன் வந்த தம்பியை வாடா சாலைகள் அமர்ந்து சாலை மறியல் செய்யலாம் என்று அழைத்துள்ளார். அவர் எதுவுமே பேசாமல் அமைதி காத்த நிலையில், அங்கு வந்த சில இளைஞர்கள் அவர் தெரியாமல் பேசி விட்டார் என்று கூறி அழைத்துச் செல்ல முயற்சித்தனர். 

காவல்துறை அதிகாரிகள் இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது பெயர் காளிராஜ், குறிஞ்சிப்பாடியை சார்ந்த வழக்கறிஞரின் தம்பி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக 200 ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, வாகனங்களின் ஆவணங்களை எடுத்து வரக் கோரி உத்தரவிடப்பட்டது. 

இதற்கும் மறுப்பு தெரிவித்த காளிராஜ் மீண்டும் அடங்க மறுத்து அடாவடி செய்ததால், இந்த விஷயம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் தம்பியான காளிதாஸ் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் வந்தது தவறு, காவல் அதிகாரிகள் விதித்த ரூ.200 அபாரதத்துடன் அமைதியாக சென்று இருக்கலாம். எம்.எல்.ஏ, அந்த கட்சி, இந்த கட்சி என அடாவடி பேச்சு வாகனத்தை பறிமுதல் செய்ய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kurinjipadi VCK Supporter Argue with Police Cops he Could Not Wear Helmet and Face Mask


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->