திருக்குறளை செம்புக்கம்பியில் செதுக்கி சாதனை செய்யும் கடலூர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர், செம்பு கம்பியால் திருக்குறளை வடிவமைப்பு கின்னஸ் சாதனை செய்ய முயற்சித்துள்ளார். 

சிறு துரும்பையும் அழகிய பொருளாகும் மாற்றும் அமைப்பு மற்றும் நுணுக்கம் வெகு சிலரிடம் இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். காணும் பொருட்களில் கலைவண்ணம் காணும் கலைஞர்களிடையே, ஜெயக்குமார் வித்தியாசமான முயற்சியில் களம் இறங்கியுள்ளார். 

கடலூர் மாவட்டத்திலுள்ள கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மூன்றாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனைத் தொடர்ந்து, குழந்தை பருவத்தில் இருந்தே சிறு கம்பிகள் மூலம் தான் விரும்பிய வடிவத்தை செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளார். 

நாளடைவில் எளிதாக வளையும் தன்மையுடைய செம்பு கம்பியை பயன்படுத்தி, டாலர், கீ செயின், பெயர்கள் என்று பல பொருட்கள் செய்துவந்த நிலையில், தனது கலையின் மீது உள்ள ஆர்வத்தால் உலகப் பொதுமறையாக கருதப்படும் திருக்குறளை செம்பு கம்பியால் வடிவமைக்கும் பணியை துவக்கி உள்ளார். 

இரண்டு அடி கொண்ட திருக்குறளை எந்தவிதமான இணைப்பும் இன்றி, ஒரே செம்பு கம்பியை வளைத்து குறளை வடிவமைக்க தொடங்கியுள்ளார். முதலடியில் நான்கு வார்த்தைகளும், இரண்டாம் அடியில் மூன்று வார்த்தைகளும் என இணைந்த படி கோர்வையாக தயாரித்து வருகிறார். 

மேலும், 1,330 குறள்களையும் செம்பு கம்பியில் வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Jayakumar Make Thirukural Single Copper Wire 16 April 2021 Try Guinness Champion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->