இந்தா புடி.. குளிர்பானத்தை தூக்கி வீசிய திமுக உடன்பிறப்பு..! தாகத்தால் தவித்த தாய்மார்களுக்கு தலையில் காயம்.! - Seithipunal
Seithipunal


திமுக பிரச்சார கூட்டத்திற்கு வந்த பெண்கள், தகிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் குளிர்பானங்களுக்கு கையேந்திய சூழல் ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் திமுக பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள், அங்கு வெயிலில் காத்திருந்துள்ளனர். குறிஞ்சிப்பாடி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் நெய்வேலி திமுக பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

பெண்கள் வெயிலால் கஷ்டப்பட்டு இருந்த நிலையில், தண்ணீருக்காக பெரும் தவித்துள்ளனர். இந்நிலையில், வாகனம் ஒன்றில் வைத்து இலவசமாக குளிர்பான பாட்டில்கள் வழங்கப்பட்ட நிலையில், அந்த வாகனத்தை சுற்றி பெண்கள் கைகளை ஏந்தியவாறு குளிர்பான பாட்டிலை பெற்றுள்ளனர்.

சிலர் குளிர்பான பாட்டில்களை வாங்கியதும் அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சில பெண்கள் கைக்குழந்தையுடன் குளிர்பான பாட்டில்களுக்காக காத்து கிடந்தனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதால், மொத்த குளிர்பான பாட்டிலையும் எடுத்து வாகனத்தில் இருந்த திமுக பிரமுகர் மக்களை நோக்கி பறக்கவிட்டார். 

இதனால் ஆண்களும், பெண்களும் அங்கு அடித்துக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்பட்ட தாகத்தின் கொடுமையால், தொண்டர்கள் ஒவ்வொருவரும் குளிர்பான பாட்டிலுக்கு கையேந்தி, பின்னர் இங்கு சென்று நெரிசலில் கஷ்டப்படுவதை விட,  தாகத்திலேயே இருந்துகொள்ளலாம் என்றும் சிலர் ஒதுங்கிக் கொண்டனர். 

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்களை அழைத்து வரும் போது, சம்பந்தப்பட்டவர்கள் முதலில் கட்சியின் கொடியை கொடுப்பது போல, அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுபோன்ற நிலை தொடரும் பட்சத்தில், கட்டாயம் உயிரிழப்பு ஏற்படும் அச்சமும் உள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore DMK Neyveli Election Campaign woman Fight for cool drinks due to Heat DMK person Through it


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->