விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி கொலை : எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வீடியோ! - Seithipunal
Seithipunal


கடலூர் விருத்தாசலத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கடலூர் ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு ஒன்றினையும் அளித்துள்ளார்கள். 

இதனையடுத்து பேசிய மனைவியின் பெற்றோர், "என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்" தெரிவித்துள்ளார்கள். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் பின்னர்  மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளார்கள். 

இந்த சம்பவத்தில் போலீசார் கொலையாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக, மாணவியின் பெற்றோர் குற்றம்ச்சாட்டியுள்ளார்கள். மேலும் மாணவியின் பெற்றோருக்கு ஆதரவாக இறுதிவரை கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகளும், வன்னியர் சங்க நிர்வாகிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட தலித் இளைஞரின் தந்தை தனது மகன் கொலை செய்திருக்கமாட்டான் எனவும், இது ஆணவக்கொலை எனவும் கூறியது ஒருபக்கம் என்றால், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கொலையாளி கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார் என கூறியது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore college girl murder by dalit boy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->