எங்களை யாராச்சும் படிக்க வைக்கிறீர்களா?.. காவல் நிலையத்தில் கண்ணீர் கடலை ஏற்படுத்திய சிறுமிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவியின் பெயர் லதா. இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக பாபு பாம்பு கடித்து இறந்த நிலையில், லதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பாபு உயிரிழந்த மன வேதனையில் இருந்து வந்த லதாவும் ஒரு வருடத்திற்குள் உடல் நலம் குன்றி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளும், வயது முதிர்ந்த பாட்டி செந்தாமரையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில் பாபுவின் மூத்த மகள் திடீரென மாயமான நிலையில், செந்தாமரை கடந்த சில மாதமாகவே போதிய வருமானம் இன்றி தனது பேத்திகளான ஜீவா (வயது 14) மற்றும் தர்ஷினி (வயது 10) ஆகியோருடன் தவித்து வந்துள்ளார். 

இந்நிலையில் செந்தாமரை நேற்று முன்தினம் தனது பேத்திகளுடன் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள காவல் துறையினரிடம் சிறுமிகள் இருவரும், நாங்கள் அரசு பள்ளியில் படித்து வருகிறோம். எங்களுக்கு பெற்றோர் இல்லை. வயதான பாட்டி எங்களை கவனித்து வருகிறார். அவரால் படிக்க வைக்க இயலவில்லை. எங்கள் இருவரையும் பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து படிக்க வையுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

இந்த சம்பவம் காவல் நிலையத்தில் இருந்து அனைவரையும் கண்கலங்க வைத்த நிலையில், சிறுமி ஜீவா இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், எனது பாட்டிக்கு வயதாகிவிட்டதால் அவர்களால் வேலைக்கு செல்ல இயலவில்லை. வருமானம் இல்லாமல் நாளொன்றுக்கு ஒரு நேரம் சாப்பிடுவதே மிகுந்த சிரமமாக இருக்கிறது. உறவினர்களிடம் உதவி கேட்கவும் இயலாத நிலையில், கடையில் கடனாக டீயும் பண்ணும் வாங்கித் தருவார்கள். 

இப்படியே எங்களின் வாழ்க்கை செல்கிறது. அக்கம் பக்கத்தினர் எப்போதாவது சாப்பாடு கொடுப்பார்கள். அதனை நானும், எனது தங்கையும் பங்கு வைத்து சாப்பிடுவோம். எங்களுக்கு மாற்று துணி கூட கிடையாது. கிழிந்த துணிகளை தைத்து நாங்கள் போட்டுக் கொண்டு இருக்கிறோம். எங்களது வீடும் கூரை வீடு என்பதால் அதிகளவு சேதமடைந்துள்ளது. 

மழை காலம் வந்தால் வீடு முழுவதும் தண்ணீராக இருக்கும். அப்பா ஏற்கனவே வீட்டிற்குள் பாம்பு கடித்து இறந்ததால், வீட்டில் இருக்க பயமாக உள்ளது. தற்சமயம் சித்தி வீட்டில் தர்மசங்கடமான சூழ்நிலையில் நாங்கள் தங்கி வருகிறோம். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம். நீங்கள் ஏதேனும் பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து, படிக்க வைப்பீர்களா? என்று கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு கண் கலங்கிய காவல்துறை அதிகாரிகள், சிறுமிகள் இருவருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அளித்தனர். பின்னர் இருவருக்கும் புத்தாடை வாங்கிக் கொடுத்து, நிவாரண பொருட்களை வழங்கி உள்ளனர். அங்குள்ள தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கல்வியை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore child want help to education police men also cry their situation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->