நெய்வேலி என்.எல்.சி விபத்து.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்.. அமித்ஷா இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அனல்மின் நிலையத்தில் இன்று திடீரென பாய்லர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலர் மோசமான தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில், தற்போது வரை 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்துகள் அரங்கேறியுள்ளதாக பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமித்ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கேட்டறிந்துள்ளார். மேலும், மத்திய அரசு சார்பாக தேவையான நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudallore Neyveli NLC Boiler accident Amith sha regret


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->