சாலையில், சுற்றி திரியும் மாடுகள்.! விபத்தை தடுக்க வினோத முயற்சி.!  - Seithipunal
Seithipunal


காரைக்குடி பகுதியில் இருக்கும் நூறடி சாலை, செக்காலை ரோடு, கல்லூரிச்சாலை, பழைய பஸ் நிலையம், கழனிவாசல், வாட்டர் டேங் பகுதி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இவை அனைத்தும் பகல் நேரங்களில் எங்காவது மேய்ச்சலுக்கு சென்றுவிடும். 

இரவு நேரங்களில் சாலையில் வந்து படுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிலிள் மற்றும் காரில் வரும் நபர்கள் இந்த மாடுகள் இருப்பதை கவனிக்காமல் மீடுகளின் மீது மோதி விபத்தை சந்திக்கும் நிகழ்வு அன்றாடம் நிகழ்ந்து வருகின்றது. 

எனவே, இதுகுறித்து காரைக்குடி மக்கள் மன்றம் சார்பில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஒன்றாக சேர்த்து, இரவு நேரத்தில் சாலைகளில் ஒட்டப்படும் மிளிரும் ஸ்டிக்கர்களை அந்த மாடுகளின் இரு கொம்பு பகுதியிலும் ஒட்டப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சாலையில் இந்த மாடுகள் படுத்து கிடைக்கும் போது தொலை தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் முன் கூட்டியே அறிந்துடு விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்கிறார் மக்கள் மன்ற நிர்வாகி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cow making accident in karaikudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->