தமிழகத்தில் இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் இன்று துவங்கியது..! - Seithipunal
Seithipunal


லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் அனுமதி இந்தியாவின் புனே சீரம் இன்ஸ்ட்டியூட்டுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த மருந்தை இந்தியாவில் சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி, முதற்கட்ட சோதனை முடிக்கப்பட்டு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2 வது கட்ட மனித சோதனையை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. விலை குறைவாகவும், அனைத்து வயது தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் ஜெனிரிக் முறையில் மருந்து தயாரிக்க திட்டமிட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டை பரிசோதிக்க ஐ.சி.எம்.ஆர் சென்னையை தேர்வு செய்திருந்தது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ மனையிலும் கோவிஷீல் தடுப்பூசி பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்திருந்தார்.

அதன்படி, இந்த தடுப்பூசி பரிசோதனை சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ மனையிலும் நடத்தப்படவுள்ளது. இந்த 2 மருத்துவமனைகளிலும் சுமார் 300 நபர்களிடம் கோவிஷீல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்தத் தடுப்பூசி 15 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமாக உள்ள நபர்களுக்கு செலுத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் இன்று துவங்கியுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் துவக்கம்.

ஆக்ஸ்போர்டு பல்கலை. உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மருந்து, இந்தியாவில் 16 இடங்களில் பரிசோதனை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

covishield vaccine testing start in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->