உள்ளாட்சி தேர்தல் குறித்து நீதிமன்றம் தடாலடி.! தமிழக அரசின் அறிவிப்பு என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறைக்கான பிரதிநிதிகள் தேர்வு தெர்ந்தெடுக்க பட்டனர். இவர்களின் பதவிக் காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைந்துள்ளது. 

இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெற வில்லை இதுகுறித்து தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில், தமிழக அரசும், தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் பல்வேறு காரணங்களை கூறுகின்றன. மேலும் அணைத்து மாவட்டங்களிலும் தொகுதி மறு வரையறை செய்ய இருப்பதால் தேர்தல் நடத்த தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. 

அடிக்கடி தள்ளிபோட்டதால் கோபம் அடைந்த  உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை விரைவாக தேர்தலை நடத்த உத்தரவிட்டன. இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் இருப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. 

இது குறித்து பதிலளித்த தமிழக அரசு, தொகுதி மறுவரையறை பணிகள் இன்னும் முழுமையாக  முடியவில்லை என்று கூறியுள்ளது. இதன் பிறகு எப்போது பணிகள்  நிறைவடையும். இதுகுறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court rules over local elections questions to tn govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->