கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்...மருத்துவமனைக்கு அனுப்பி நூதன தண்டனை கொடுத்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவர்களிடையே பொதுவாக அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால், இப்போதெல்லாம் இது அதிகப்படியாக இருக்கின்றது. 

திருச்சி பிராட்டியூரில் அமைந்துள்ளார் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்கள் அப்பொழுது உள்ளே நுழைந்து தடுக்க முயன்ற போதும் சண்டை ஓயவில்லை. இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தடுத்து நிறுத்தினர். 

பின்னர் இந்த பிரச்சனையில் ஈடுபட்ட 28 பேர் மீது எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமென் கூறி எப் ஐ ஆர் நீக்கக்கோரி மாணவர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எப்.ஐ.ஆர் பதிவை ரத்து செய்து அதன் பின்னர் மாணவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்து இருக்கின்றனர். இதுகுறித்த தண்டனையாக அவர்களுக்கு  திருச்சியில் இருக்கும் அரசு மருத்துவமனை முழுவதையும் ஒரு நாள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர். 

இதன் படி மாணவர்களும் மருத்துவமனைக்கு வந்து பொதுவார்டை சுத்தம் செய்தனர். தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் இருந்த குப்பைகளை அகற்றி இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court gives diffrent type of punishment to college student


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->