சீனாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவியது கரோனோ வைரஸ்..பீதியில் தமிழக மக்கள்.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனோ என்ற புதியவகை வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டு வருவதால், இந்த வைரசால் தற்போது வரை சீனாவில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனைப்போன்று அங்குள்ள உஹான், பீஜிங், ஷாங்காய், ஸெனான், தியான்ஜின் மற்றும் ஜேஜியாங் போன்ற பகுதியிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்கா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸிலின் தாக்கத்தால் சுவாசக்கோளாறு பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 

மேலும், கரோனோ வைரஸிற்கு இன்று காலை வரை சுமார் 170 பேர் பலியாகியுள்ளதாகவும், 7,711 பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் சவுத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  கரோனோ வைரஸ் பரவ அதிக வாய்ப்பு நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 23வது இடத்தில் இருப்பதாகவும் முதல் மூன்று இடங்களில் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஹாங்காங் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு  கரோனோ வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் கேரளா திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு.

கரோனோ பாதிக்கப்பட்டுள்ள மாணவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என கேரள அரசு தெரிவித்தது. 

இந்தநிலையில், சீனாவில் இருந்து சென்னை வந்த 28 பேர் வீட்டுக்காவலில் வைத்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை நேற்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த பொறியாளர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

சீனாவிலிருந்து வந்த விமல் என்பவருக்கு இரண்டு நாட்களாக சளி, இருமல் உள்ளது. இதையடுத்து ததிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல சீனாவிலிருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு வந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கரோனோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கரோனோ வைரஸ் பரவியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus spread in two district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->