இளைஞர்களின் கூட்டு முயற்சி.. பசிபோக்கிய கிராமத்து இளைஞர்களின் முயற்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த தொகையில் மளிகை பொருட்கள், இலவசமாக அரிசி, சீனி மற்றும் எண்ணெய், பருப்பு போன்ற விநியோகம் போன்றவற்றை அரசு மேற்கொண்டு வந்தது. 

மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உணவகங்கள் இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள செல்லும் நபர்கள் சாப்பிட முடியாத சூழ்நிலையும் இருக்கிறது. 

வெளிமாநிலங்களில் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பணியாற்றி வரும் நபர்கள், தாங்கள் தங்கியிருந்த இடங்களிலேயே இருந்து, கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொங்கன்தான் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர்கள் பசியால் வாடும் நபர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளனர். இவர்களின் திட்டப்படி, அங்குள்ள மெடிக்கல் கடைக்கு முன்னதாக வாழைத்தார்களை கட்டி வைத்துள்ளனர். மேலும், இதனை தங்களின் சொந்த செலவில் கட்டி வைத்துள்ள நிலையில், இதனை இலவசமாக பொதுமக்கள் சாப்பிடு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus curfew youngster make free banana to eat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->