தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் உள்ள தீவிர சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். 

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணியை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. தடுப்பூசி ஒத்திகை இன்று முதல் சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற உள்ளது.இதற்காக 47,200 தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 21,170 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி காண பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழகத்தில் இன்று 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது.

திருவள்ளூர் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, திருமழிசை, நேமம் சுகாதார நிலையங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை அரசு மருத்துவமனைகள், நிலக்கோட்டை சுகாதார நிலையத்தில் ஒத்திகை நடக்கிறது. நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி சமாதானபுரம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், சூலூர் அரசு மருத்துவமனை, எஸ் எல் எம் ஹோம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccine rehearsal in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->