கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமா? சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் நாளை முதல் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3000 தடுப்பூசி மையங்களிலும், தமிழகத்தில் 166 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதாரப் பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படது.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாக போடப்படுகிறது.

இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு, அவர்கள் கண்காணிக்க படுவார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பின்பே, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் தற்போது வரை நான்கு லட்சத்தி 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் இரண்டு முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும்.

ஒரு நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படுகிறது. வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது. இந்த தடுப்பூசி போட்டபின் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மது அருந்தினால் பாதிப்பு ஏற்படுமா என அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் இல்லை. இருப்பினும் மது அருந்துவது எந்த காலத்திற்கும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CORONA vaccine in tn start jan 16


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->