வீடு வீடாக பரிசோதனை, களத்தில் குதித்த அதிகாரிகள்.! பதுங்கி கிடக்கும் நோயாளிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்றுவரை 67 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இறந்த ஒருவர் விடுத்து மதுரையில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகி உள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், கொரோனவால் உயிரிழந்தவரிடம் இருந்து பரவி அவர்களின் குடும்பத்தினர் வசித்த பகுதிக்கு காவல்துறையினர் முன்னரே சீல் வைத்து யாரையும் வெளியேயும், உள்ளேயும் அனுமதிப்பதில்லை. இப்போது அப்பகுதியில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால் இன்று முதல் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அண்ணாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல், சுவாச கோளாறு இதுபோன்ற பிரச்சனைகள் யாருக்காவது இருக்கிறதா என்று பரிசோதித்து பார்த்தனர். 

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிலருக்கு உறுதி செய்யப்படும் பட்சத்தில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona test in madurai 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->