மருத்துவமனையில் மின் தடை: அடுத்தடுத்து உயிரிழந்த 3 கொரோனா நோயாளிகள்...மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதிப்பட்டதாகவும் அந்த ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, மின்தடை ஏற்படுவதற்கும் ஆக்சிஜன் வழங்குவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது, சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகளின் இறப்பிற்கு அவர்களின்  உடலில் வேறு ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி முதற்கட்ட தகலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார், அதில் கட்டுமானப்பணியின் போது மின்வயர் துண்டிக்கப்பட்டதால் 40 நிமிடம் மருத்துவமனை வளாகத்தில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும் மின் வயர் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் 3 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் வந்திருப்பதாகவும் இது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து தமிழக சுகாதாரத்துறையிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona patient died in thirupur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->