தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 57 பேர் யார் யார்? விவரங்கள் வெளியானது!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தமிழக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காலையில் ஏழு பேருக்கு  உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மாலையில் 50 பேருக்கு உறுதிப்படுத்தபட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் நடத்திய மத பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு ஆயிரத்து 131 பேர் திரும்பியுள்ள நிலையில் அதில் 515 பேர்கள் மட்டுமே அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை செய்ததில், அவர்களில் 50 பேருக்கு இன்று மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரிய வந்து உள்ளது. 

இதனை தவிர்த்து மீதமுள்ள ஐந்து பேர் யார் என்ற விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 35 வயதான சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், 25 வயது மற்றும் 61 வயதான சென்னை பிராட்வேயில் சேர்ந்தவர்கள், இவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து வந்தவர்கள். 85 வயதான திருவான்மியூரை சேர்ந்த ஒருவர் மற்றும் 54 வயதான கழிப்பட்டூரை சேர்ந்த ஒருவர் என 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று 50 பேர் டெல்லி சென்றவர்களில் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 4 பேர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 18 பேர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 23 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எண்ணிக்கையானது 124 ஆக உயர்ந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona 31 march tamilnadu patient details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->